Latest News :

’எக்ஸ் வீடியோஸ்’ படத்தை பாராட்டிய நடிகை கெளதமி!
Friday March-09 2018

ரசிகர்களிடன் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘எக்ஸ் வீடியோஸ்’. அதற்கு காரணம் இப்படத்தின் தலைப்பாக இருந்தாலும், இப்படம் என்னவோ மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவே உருவாகியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு.

 

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆபாச இணையதளங்களில் ஒன்றான எக்ஸ் வீடியோஸால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை சொல்லும் படமாக மட்டும் இன்றி, அதன் ஆபத்தையும் விளக்கும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், சென்சார் குழு உறுப்பினராக உள்ள நடிகை கெளதமியும் இப்படத்தை பார்த்துவிட்டு, படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

 

அதுமட்டும் அல்ல, டீப் டார்க் சீக்ரெட் ஜானர் படங்களின் ஜாம்பவானாக திகழும் பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் எக்ஸ் வீடியோஸ் படத்தை பாராட்டியிருப்பது படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

ஒவ்வொரு தனி மனித சுந்தந்திரத்தில் ஊடுருவி, அவர்களின் அந்தரங்களை அவர்களுக்கே தெரியாமல் களவாடும் கும்பல் இதுபோன்ற இணையத்தில் அதை பதிவேற்றம் செய்து வருவதையும், இதுபோன்ற செயல்களுக்கு பின்னணியில் மாஃபியாக்கள் போல செயல்படுபவர்கள் பற்றியும் கூறி மக்களை எச்சரிக்கைப் படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கும் சஜோ சுந்தர், தனது படத்திற்கு ‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற தலைப்பு வைத்ததற்கு காரணம், எக்ஸ் என்பது தவறு, அதாவது தவறான வீடியோ என்பதற்கான அர்த்தத்தில் தான் வைத்திருக்கிறாராம்.

 

காதலர்கள், கள்ளக்காதலர்கள் ஏன் சில நேரங்களில் தம்பதிகள் கூட உணர்ச்சி வேகத்தில் எடுத்துக் கொள்ளும் வீடியோக்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவையாக அமைகின்றது என்பதை எச்சரிக்கும் இப்படம், நம் செல்போனில் நாம் ரகசியமாக எடுக்கும் வீடியோக்கள் ரகசியமானவை அல்ல, அதை நாம் எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அது யார் மூலமாக வெளி உலகத்துக்கு வந்தே தீரும் என்பதை சொல்வதோடு, ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

 

கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர்  உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.

 

நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ  நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.

இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு வலையுலக ஆபத்தை தான் இந்த படத்தில் சொல்லி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாகக் கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள், என்று கூறிய இயக்குநர் சஜோ சுந்தர், இந்த படத்தை பெண்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெண் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி ஒன்றை திரையிட இருக்கிறாராம்.

 

மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் இதுபோன்ற ஆபாச இணையதளங்களை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்பதனை தனது படத்தின் மூலம் வலியிறுத்தியிருக்கும் சஜோ சுந்தர், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

 

தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் வெளியாகிறது.

Related News

2135

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery