கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய 6 இயக்குநர்களுடன், 4500 துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹெவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
4500 துணை நடிகர்களுடன் பவர் ஸ்டார், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா என பெரிய நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...