’தரமணி’ படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை ஆண்ட்ரியா, கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருவதும், அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் கட்டணம் பெறுவதையும் நேற்று நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.
இதற்கிடையில், தனக்கு பட வாய்ப்புகள் இல்லாதது குறித்து ஆண்டிரியா ஆத்திரப்பட்ட சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
ஆம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்கள். அந்த வரிசையில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்துக் கொண்டார்.
அப்போது பெண்கள் முன்னேற்றம் மற்றும் அடக்குமுறை குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆண்ட்ரியா, ”‘தரமணி’ என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த படத்தில் எனது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, படத்தையும் பாராட்டினார்கள். வியாபார ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் அப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. ஒரு படம் கூட எனக்கு இல்லை.
இதே ஒரு முன்னணி ஹீரோவுடன் மூன்று டூயட் பாடல், ரொமான்ஸ் காட்சிகள் என்று நான் நடித்திருந்தால், எனக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்திருக்கும், நானும் முன்னணி ஹீரோயினாகியிருப்பேன். இது தான் தமிழ் சினிமாவின் நிலை. ஏன், முன்னணி நடிகர்களுடன் நடித்தால் தான் அவர்கள் நடிகையா?, ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்தால் தான் நடிகை என்று ஏற்றுக்கொள்வீர்களா? நடிப்பு திறன் படைத்த நடிகைகளை நடிகையாகவே பார்க்க மாட்டீர்களா?” என்று மாணவர்கள் முன்னிலையில் ஆத்திரப்பட்டு பேசினார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...