Latest News :

சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு சிறப்புமலர் வெளியீடு!
Monday March-12 2018

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் வெப்சைட் துவக்கவிழா ​நேற்று  நடைபெற்றது இதில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் , FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K. செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

 

சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியீட , தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். அதேபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சின்னத்திரை வெப்சைட்டை FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K.செல்வமணி மற்றும் சிவன்ஸ்ரீநிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.

 

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார். அதைதொடர்ந்து விழாவில் 

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது, “சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் சிறப்பாகவே செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். நாங்கள்  அனைவரும் ஒரே இன்ஸ்டிடியுடில் ஒன்றாக படித்தவர்கள். இதை ஆரம்பிக்க ஒரு வித்தாக இருந்தவர் R.K.செல்வமணி தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அணுகுமுறை மற்றும் படைப்புரீதியாக மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. இன்னும் இவை இரண்டும் தனி தனியாக இருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது. இன்னும் சில தினங்களில் பெரியதிரை மற்றும் சின்னத்திரை சங்கங்கள் ஒன்றாக வேண்டும். இப்போது வேறு வேறாக இருந்தாலும் புரிமுரையும் , கருத்துப் பரிமாற்றமும் , தொழில்நுட்ப பரிமாற்றங்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. பாலிவூட்டில் மற்றும் ஹாலிவுடில் பெரிய நடிகர்களும் கேமராமேன்களும் சின்னித்திரை தொடர்களில் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் பேசுகையில், “பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை பல பேர் சின்னதிரையில் சீரியல் இயக்க வேண்டும் என்று பல பிரபல சேனல்கள் மற்றும் தயாரிபாளர்களும் என்னை அப்ரோச் செய்தார்கள். அதற்கு நான் சொன்னேன் “கதை , திரைக்கதை , மற்றும் வசனத்தை மட்டும் நான்  பண்ணுகின்றேன்” ஆனால் அதை நான் இயக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இப்பொது பெரிய திரையில் படம் இயக்கி கொண்டு இருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமர்சனங்கள் வரும் என்று பார்த்தேன். ஒரு கட்டத்தில் சரி ஒரு சீரியல் எடுத்துபார்போம் என்று முடிவெடுத்தேன். என்ன பயம் என்றால் பெரியதிரையில் சாதித்ததை சின்னத்திரையில் செய்யமுடிவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள். அதனால் பெரியதிரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால் அந்த முப்பது நாளும் வேலை இருக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் முழு குழுவிற்கும் எல்லா நாளும் வேலை இருக்கும் என்று சொன்னார். அப்போது தான் புரிந்தது சின்னதிரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால் தான் நான் கதை , திரைக்கதை , வசனம் மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினேன். இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதற்காக எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்.” என்று தெரிவித்தார்.

 

FEFSI தலைவர் R.K. செல்வமணி பேசும் போது, “தனி தனி அமைப்பாய் இருந்தாலும் ஒரே இலக்கோடு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்த சின்னதிரை இயக்குனர் சங்கத்தை பெரிய பெரிய இயக்குநர்கள் சேர்ந்து ஆரம்பித்தார்கள். சின்ன விதையாக விதைத்த இந்த சின்னத்திரை இன்று ஆலமரமாக தளிர்த்து பெரிதாக வளந்திருக்கின்றது. நம்மளுக்குள் வேறுபாடு இல்லாமல் இருக்கிறோம். இது மிக பெரிய வளர்ச்சியாக இத்தினத்தை அடைந்திருக்கிறது. இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி என்னவென்றால் பெரியதிரையின் ஆண்டு வருமானத்தை விட, தமிழ் சின்னத்திரையின்  ( Satellite ) ஆண்டு வருமானம் ஐந்து மடங்கு அதிகம். பெரியதிரைக்கு நிகரான தொழில்நுட்பக் கலைஞர்கள் சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்.

 

மேலும் சின்னத்திரை இயக்குநர் சங்கம் சார்பில் இன்று ஒரு சிறப்பு மலரை வெளியிட்டார்கள் அதில் சில நண்பர்களின் புகைப்படம் விடுபட்டிருக்கிறது. விடுபட்டவர்களின் புகைபடத்தை நிகழ்ச்சி சிறப்பு மலரில் வெளியிடுகிறோம். இதுமட்டுமின்றி ஒரு வலைதளமும் ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று கடந்த மூன்று வருடமாக  நினைத்துக்கொண்டிருந்தோம் இப்பொது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்  அடுத்து இணையதளம் ஆரம்பிப்பதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்.” என்றார்.

Related News

2159

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery