தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ்.
‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார். அனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு வருடமாக தாடி வளர்த்தார். ஆரம்பத்திலேயே கதாபாத்திரத்திற்காக மெனக்கெடும் நடிகர் என்ற பெயர் வாங்கியதோடு, சிறந்த புதுமுக நடிகருக்கான எடிசன் விருதையும் பெற்றார்.
தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சுரேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம். இருந்தாலும் வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நல்ல கதாபாத்திரமாக இருந்தால், எந்த வேடங்களிலும் நடிக்க ரெடி என்றும் கூறுகிறார்.
மொத்தத்தில், நடிப்புக்காக எதையும் செய்யும் ஆர்வமுள்ள நடிகர்களில் உருவராக திகழும் சுரேஷ், அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகராகவும் இருப்பதால் இயக்குநர்கள் தாரளமாக அவரை அனுகலாம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...