Latest News :

தொடங்கியது தண்ணீர் தட்டுப்பாடு - அதிரடி நடவடிக்கையில் விஜய்!
Monday March-12 2018

கோடைக்காலத்தின் சூடு அதிகரிக்கும் முன்பாகவே தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சென்னை போன்ற மாநகரங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் பிளாஷ்டிக் குடங்களுடன் அலைமோதி வருகின்றனர்.

 

இந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் பொத்மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

 

ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நேரடியாக ரசியலில் இறங்கிவிட்ட நிலையில், விஜயும் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தனது மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதோடு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆப் மற்றும் இணையதளம் ஒன்றையும் விஜய் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் தலைமையில், விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

அதன்படி, மதுரை தெற்கு மாவட்ட விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி அருகே உள்ள பாபுநகர் மக்களுக்கு, வார்டு உறுப்பினர் ராஜ்மனோ ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சுந்தரராஜன் மற்றும் அவனி நகர செயலாளர் அவனி சரவணனோடு இணைந்து, வீடு வீடாக சென்று தண்ணிர்  விநியோகம் செய்துள்ளனர்.

 

விஜய் ரசிகர்களின் இத்தகைய செயலை பலர் பாராட்டி வருகிறார்கள்.

Related News

2161

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery