நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜா, சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் வைத்து பல படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக உருவெடுத்தார். ஆனால், அவர் ஏற்படுத்திய கடன் சுமையால் தவித்த சூர்யா குடும்பத்தார், தற்போது ஞானவேல்ராஜாவை கழட்டிவிட்டு விட்டனர்.
இதனால், புது கூட்டணி அமைத்து ஆபாச படங்களை தயாரித்து லாபம் சம்பாதித்து வரும் ஞானவேல்ராஜா ஒரு பக்கம் ஏகப்பட்ட கடன் வாங்கியிருப்பதாக கூறினாலும், தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
அப்படி அவர் தயாரிக்கும் ஒரு படம் தான் ‘நோட்டா’. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவே தற்போது ஞானவேலுக்கு பிரச்சினையாகியுள்ளது.
திரையரங்கங்கள் மற்றும் கியூப் நிறுவனத்திற்கு எதிராப ஸ்டிரைக் அறிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், ஆடியோ நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஞானவேல் இந்த உத்தரவை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...