கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில், இ4 எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் அதில் வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்ற தலைப்பில் பாலா இயக்க, இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் துருவுக்கு ஜோடி தேடும் பணியிலும் பாலா ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், துருவுக்கு ஜோடியாக நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியை நடிக்க வைக்க ‘வர்மா’ முடிவு செய்த பாலா, இது குறித்து கெளதமியிடம் பேசியுள்ளார். தனது மகளை ஹீரோயினாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள கெளதமி, பாலாவின் அழைப்பு ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, தனது சினிமா நண்பர்களிடம் விசாரித்தாராம். பாலாவின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அவர் படத்தின் ஹீரோக்கள் தான் மக்களிடம் பிரபலமடைவதோடு, முன்னணி ஹீரோக்களாகும் உருவெடுப்பார்கள். அவர் படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் இதுவரை பிரபலமானதில்லை, என்று அட்வைஸ் செய்தார்கள்.
இந்த அட்வைஸை கேட்டு சற்று யோசித்த கெளதமி, பாலாவுக்கு நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமான் தகவல் இல்லை என்றாலும், இந்த விவகாரம் குறித்து கெளதமியோ அல்லது ‘வர்மா’ படக்குழுவோ வாய் திறந்தால் தான் உண்மை தெரியும்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...