‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகிய இரண்டுப் படங்களும் ரஜினிகாந்தின் தோல்விப் படங்களில் முக்கியமான படங்கள் மட்டும் இன்றி, அப்படங்களால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை பலவிதமான போராட்டங்கள் மூலம் திரும்ப பெற்றனர்.
இதற்கிடையே, ’கபாலி’ படம் மிகப்பெரிய வெற்றிப் படம், அனைவருக்கும் லாபம் கொடுத்த படம் என்று அதன் தயாரிப்பாளர் தாணு கூறி வந்தாலும், சிலர் கபாலி படத்தாலும் நஷ்ட்டப்பட்டு இருப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘காலா’ படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி காலா ரிலீஸ் ஆகும் என்று அதன் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் தெரிவித்திருந்த நிலையில், 75 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘காலா’ படத்தை லைகா நிறுவனம் ரூ.125 கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.
இதனால், காலா தயாரிப்பாளரான ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. அதுவும் படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படி ஒரு வியாபாரம் நடந்திருப்பது தனுஷுக்கு ஜாக்பாட் அடித்தது போலதான் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...