பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற படத்தில் நடித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியதோடு, தொடர்ந்து கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து தன்னை முன்னிலைப்படுத்தி வந்தார்.
இதற்கிடையே, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வித்யா பாலன், சில ஆண்டுகளிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார், என்று தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்து வித்யா பாலன், தானும், தந்து கணவரும் அவர் அவர் தொழிலில் பிஸியாக இருக்கிறோம், அதை தான் இப்படி தவறாக பத்திரிகைகள் புரிந்துக்கொண்டன, என்று விளக்கம் அளித்திருந்தார். அத்துடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர், தனது கணவருடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொளவதையும் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகருக்கு வித்யா பாலன் மனைவியாக உள்ள தகவல் இந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான நந்தமூரி ராமாராவ் எனப்படும் என்டிஆர்இன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தயாரிப்பதோடு, ஹீரோவகவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் என்.டி.ஆர் கேரக்டரில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவர் மனைவி பசவதாரகம் கேரக்டரில் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.
தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த வித்யா பாலன், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு மனைவியாக நடிப்பதற்கு பெரும் தொகையை சம்பளமாக பெற்றிறுக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்க, திருமணத்திற்கு முன்பே தென்னிந்திய திரைப்படங்களை தவிர்த்து வந்தவர், தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...