ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அக்கா மகன் சிரஞ்சீவி சர்ஜா. இவர் நடித்த பல படங்கள் கர்நாடகாவில் சக்கைப்போடு போட்டு வசூலில் கலக்கியவை. இவரது நடிப்பில் தமிழில் முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது 'சீசர் 'என்கிற படம். இப்படத்தை இயக்கியிருப்பவர் புதுமுக இயக்குநர் வினய் கிருஷ்ணா.
இயக்குநர் சொன்ன கதை பிடித்துப் போனதால் வி.ரவிச்சந்திரன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். அவர் நடித்த 'பருவராகம் 'படம் தமிழில் வெளியாகி 365 நாட்கள அதாவது ஓராண்டு ஓடியது என்பது வரலாறு. அப்படிப்பட்ட ரவிச்சந்தின் தன் பாத்திரம் பிடித்ததால் இதில் நடித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே படத்தில் நடிப்பவரல்ல பிரகாஷ்ராஜ். அவருக்கும் இக்கதை பிடித்து உடனே நடிக்க தன் சம்மதத்தைக் கூறியிருக்கிறார்.
நாயகியாக மும்பைப் பெண் பாருல் யாதவ் நடித்துள்ளார். இவர் அழகுக்கும் நடிப்புக்கும் பெயர் பெற்றவர். இவர் 2 பிலிம்பேர் விருதுகள் உள்பட 10 விருதுகள் பெற்றவர்.
கடன் வாங்கி கார் வாங்கி விட்டு கடனைக் கட்ட முடியாமல் ஏமாற்றும் நபர்களின் கார்களை அவர்களுக்குத் தெரியாமலேயே கைப்பற்றித் தூக்கும் கார் சீசர் ஒருவன் பற்றிய கதை தான் இது. இதன் பின்னணியில் உள்ள பைனான்சியர்கள், தாதாக்கள், ரவுடிகள் பற்றிய நிழல் உலகத்தையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பொதுவாக இப்படித் தவணை தவறவிட்டவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் கார்களைச் சீஸ் செய்ய பல நடைமுறைகள், யுக்திகள், தொழில் நுணுக்கங்கள் உள்ளன. அவற்றை விரிவாகப் படத்தில் காட்டியுள்ளார்கள். வெளிநாட்டுக்கார்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்கிற விழிப்புணர்வையும் அளிக்கிறது படம். க்ரைம் பின்னணியில் உருவாகியுள்ள விறுவிறுப்பான பரபரப்பான ஓர் அதிரடி ஆக்ஷன் படம் 'சீசர் ' என்று கூறலாம்.
சிரஞ்சீவி சர்ஜா, பாருல் யாதவ், வி.ரவிச்சந்திரன், பிரகாஷ்ராஜ், நாகி நீடு பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இப்படம் அவர்கள் அனைவருக்குமே நடிப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்த படம் எனலாம். படத்தை த்ருதி கிரியேஷன்ஸ் சார்பில் த்ரிவிக்ரம் சபல்யா தயாரித்துள்ளார். ,எஸ்.கே. எல்.என்.எஸ். புரொடக்ஷன்சும் இணைந்து தயாரித்துள்ளது.
படத்துக்கு ஒளிப்பதிவு -அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா, இசை - சந்தன் ஷெட்டி இவர் கன்னட டிவி சேனலில் பிக் பாஸ் வின்னர். இணை தயாரிப்பு - வினய் கிருஷ்ணா.
'சீசர் 'படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக்காட்சி கேரளா சபரிமலையில் நடந்து 85 நாட்களில் படப்பதிவு முடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதி கிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது.
தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது. ஓர் அதிரடி ஆக்ஷன் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள். 'சீசர் 'வருகிற 29-ல் வெளியாகவுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...