படங்களில் நடித்து பிரபலமாவதை விட சர்ச்சையான விஷயங்களை பேசி பிரபலமாகி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே, ரஜினியுடன் ‘கபாலி’, பிரகாஷ் ராஜுடன் ‘தோனி’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர், இந்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற மொழியில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை, வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது என்று நடிகைகள் பேச தயங்கும் பல விஷயங்கலை துணிச்சலாக பேசுவதோடு, அதுபற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய போது, தன்னிடம் வால் ஆட்டிய பிரபல தமிழ் நடிகரை கண்ணத்தில் அறைந்த விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை நேஹா தூபியா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, ”நான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்த போது முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டேன். அப்போது பிரபலமான தென்னிந்திய நடிகர் ஒருவர் திடீர் என்று என் பாதங்களை வருடினார். அந்த நடிகரை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை, அவர் என் பாதங்களை வருடியதும் கோபத்தில் அவரை ஓங்கி அறைந்துவிட்டேன்.” என்று தெரிவித்தார்.
ராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கிய அந்த நடிகர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் தற்போது பெரும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
“பிரபல தென்னிந்திய நடிகர்” என்று ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார். மொத்தமே 4 தமிழ்ப் படங்களில் மட்டுமே ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். டோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, வெற்றிச் செல்வன் ஆகிய படங்கள் தான் அந்த நான்கு படங்கள். இதில் ரஜினியை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரபல தென்னிந்திய நடிகர் பட்டியலில் கார்த்தியும், அஜ்மலும் வர மாட்டார்கள். அப்படியானால் அந்த நடிகர் இவராக இருக்குமோ!
புரிஞ்சிக்கிட்டவங்க புரிச்சிக்கிங்க, புரியாதவங்க புரிஞ்சிக்கிட்டவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிங்க.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...