டிஜிட்டல் தொழில்நுட்பமான கியூப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தியேட்டர்களில் திரைப்படங்களை திரையிடுவதற்காக தயாரிப்பாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றது. அப்படி அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.
இதையடுத்து, டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தடை விதித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதோடு, இன்று (மார்ச் 16) முதல் படப்பிடிப்புகளுக்கும் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், இன்று (மார்ச் 16) முதல் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை மூடுகிறது. இந்த போராட்டம் காலவரையின்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் நடைபெற்று வரும் இத்தகைய போராட்டம் காரணமாக, வெளியாக இருந்த 20 புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் தேங்கியுள்ளதாகவும். இதுவரை சுமார் 15 முதல் 20 கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...