1983 ஆம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தவர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது முதல் கணவரான நடிகர் மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்த ஊர்வசி, சென்னையை சேர்ந்த தொழிலதிபதி ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட பிறகு சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்தவர், குழந்தை பிறந்ததற்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு ஜூனியர் நடிகரான திலீப்புக்கு ஜோடியாக மலையாளப் படம் ஒன்றில் ஊர்வசி நடிக்கிறார்.
நடிகை ஊர்வசிக்கும், நடிகர் திலிப்புக்கும் ஒரே ஒரு வயதுதான் வித்தியாசம். ஊர்வசியை விட திலீப் ஒரு வருடம் மூத்தவர். இருந்தாலும் கூட, நடிகை ஊர்வசி, நடிகர் திலீப்பை விட சீனியர் நடிகை. இதுவரை மலையாளப் படங்களில் இருவரும் ஜோடியாக நடித்ததில்லை. தற்போது முதன்முறையாக திலீப்புடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் ஊர்வசி.
மலையாள இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா அடுத்தததாக திலீப்பை வைத்து இயக்கவுள்ள, ‘கேசு ஈ வீட்டிண்டே நாதன்’ என்கிற படத்தில் ஊர்வசி, திலீப்புக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...