நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஒன் புரொடக்ஷன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவனன் இயக்கி இருக்கிறார்.
இப்படம் ஏற்கனவே ரிலிஸாகி பலரின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் வருகிற மார்ச் 23 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.
படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
'தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி' என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என சீமான் மனம் திறந்து பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினருக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் நாயகன் நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, 'ஜிஞ்சர்' என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார். இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞான்வேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புத விஜய், கசாலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...