தரமான படங்களை இயக்கி வருவதோடு, பிறர் இயக்கும் தரமான படங்களுக்கு கைகொடுத்து வரும் இயக்குநர் வெற்றி மாறன், ‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிட முன் வந்ததில் இருந்தே அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், ‘மிக மிக அவசரம்’ வெளியீட்டில் வெற்றி மாறனுடன் கிளாப் போர்டு நிறுவனம் கை கோர்த்திருப்பது படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை வெளியீட்டு பெரிய வெற்றிப் படமாக்கிய கிளாப் போர்டு நிறுவனத்தின் உரிமையாளர் சந்தியமூர்த்தி, பல தரமான படங்களை வெளியிட்டு வருகிறார். கிளாப் போர்டு நிறுவனம் வெளியிடும் படங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற பெயர் எடுத்துள்ள அவர் அடுத்ததாக ‘கோலி சோடா 2’ படத்தை வெளியிட இருக்கிறார். இதற்கிடையே, ‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்குநர் வெற்றி மாறனுடன் சேர்ந்து கிளாப் போர்டு சத்தியமூர்த்தி வெளியிடுகிறார்.
ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். படத்தில் இவர்கள் தான் ஹீரோ, ஹீரோயின் என்றாலும் ஒரு காட்சியில் கூட இருவருக்கும் காம்பினேஷன் கிடையதாம். ‘ராமன் தேடிய சீதை’, ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ஜெகன்நாத் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
முத்துராமன், லிங்கா, அரவிந்த், ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் சீமான், முக்கிய கதாபாத்திரம் ஒன்ரில் நடித்திருக்கிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...