பிரபல கன்னட நடிகர் குருராஜ் ஜக்கேஷை, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் குருராஜ் ஜக்கேஷும் நடிகர் ஆவார்.
குருராஜ் ஜக்கேஷ் தனது மகனை ஆர்.டி.நகரில் உள்ள பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக காரில் அழைத்து சென்றார்.
மதனஹள்ளி சாலையில் சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று குருராஜ் ஜக்கேஷ் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதனால் அந்த காரை குருராஜ் விரட்டி சென்று மடக்கினார்.
காரை ஓட்டிய வாலிபரிடம் வாக்குவாதம் செய்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் காரி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குருராஜ் ஜக்கேஷ் வயிற்றில் குத்த முயன்றார். உடனே குருராஜ் ஜக்கேஷ் விலகியதால் அவரது தொடையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே அந்த வாலிபர் காரில் ஏறி தப்பிவிட்டார்.
ரத்த காயத்துடன் குருராஜ் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கார் எண்ணை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் காரை ஓட்டியது சிவசங்கர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து குருராஜ் ஜக்கேஷ் கூறுகையில், அந்த வாலிபர் காரில் கத்தியை ஏன் வைத்து இருந்தார் என்று இன்னும் யோசித்து கொண்டிருக்கிறேன். இதில் அதிர்ச்சி என்ன வென்றால் தகராறு முழுவதையும் பொதுமக்கள் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் யாரும் தடுக்க வரவில்லை என்றார்.
இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...