சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சீனு ராமசாமி - வைரமுத்து கூட்டணி என்றாலே அனைத்துப் பாடல்களும் ஹிட் என்ற நிலையில், தற்போது இவர்களோடு யுவனும் இணைந்திருப்பதால், இப்படத்தை போலவே பாடல்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் தமன்னாவின் போஷன் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து இப்படக்குழுவின் இருந்து விடைபெற்ற தமன்னா, தனது அனுபவத்தை பகிர்த்துக் கொண்ட போது, “நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர் இயக்குனர் சீனு ராமசாமி. 'தர்மதுரை' படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரிய வேண்டும் என ஆவலோடு இருந்தேன். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் 'கண்ணே கலைமானே' நிச்சயம் ஒன்றாகும். இந்த படத்தில் உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். 'கண்ணே கலைமானே' படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...