தமிழ் சினிமா மட்டும் இன்றி பாலிவுட், மலையாள சினிமா, தெலுங்கு சினிமா என்று அனைத்து இடங்களிலும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக பல நடிகைகள் பேட்டிகளில் கூறி வேதனைப்பட்டு வருகிறார்கள்.
கதாபாத்திர வேடங்களில் நடித்த சில நடிகைகள் இதுபோன்ற விஷயங்களை ஓபனாக பேசினாலும், முன்னணி நடிகையாக இருப்பவர்கள் இது குறித்து எதுவும் பேசியதில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், நடிகை சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி பிரபல டிவி சேனலின் உயர் அதிகாரி ஒருவர், தனக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டார், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வரலட்சுமிக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி பலர் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் அவரது அப்பா சரத்குமார், சினிமாவில் மட்டும் இன்றி அரசியலிலும் முக்கிய இடம் வகிக்கிறார். அவரது மகளுக்கே இந்த நிலையா, என்பது தான். அந்த சமயத்தில் இந்த விஷயம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வரலட்சுமி மீண்டும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அது தான் நடிகைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
வெல்வெட் நகரம், விஷாலுடன் ஒரு படம், விஜயுன் ஒரு படம் என்று தற்போது கை நிறைய படங்களை வரலட்சுமி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...