தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 40 புதுப்படங்கள் வெளியாகமல் முடங்கி போயுள்ளது. இதனால், சுமார் 40 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், சென்னையில் உள்ள திரையரங்கங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருவதோடு, பழைய படங்களை ரிலீஸ் செய்து நல்ல முறையில் கல்லா கட்டியும் வருகிறார்களாம்.
அந்த வரிசையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘6 அத்தியாயம்’ என்ற படமும் தற்போது நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆறு குறும்படங்களை ஒன்றாக தொகுத்து, ஒரு திரைப்படமாக உருவாக்கிய இப்படத்தின் முயற்சியை பலர் பாராட்டுவதோடு, இந்த ஆறு படங்களை இயக்கிய ஆறு இயக்குநர்களுக்கும் முழுநீளத்திரைப்படம் இயக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறதாம்.
இந்த நிலையில், இந்த ஆறு படங்களில் ஒரு படத்தை இயக்கிய கேபிள் சங்கர், விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறாராம். சமீபத்தில் இவர் விக்ரமிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை விக்ரமும் ஓகே சொல்லிவிட்டதோடு, தயாரிப்பாளரும் ரெடியாகிவிட்டாராம்.
விக்ரம் தேதி கொடுத்தால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட கேபிள் சங்கர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...