‘கோலிசோடா 2’ படத்திற்காக விஜய் மில்டனுடன் இயக்குநர் கவுதம் மேனன் கைகோர்த்துள்ளார்.
இப்பத்தை ரஃப் நோட் நிறுவனம் தயாரிக்கும் ‘கோலிசோடா 2’ படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை கொடுத்திருக்கிறார். கவுதம் மேனனின் குரலில் டீசர் நல்லபடியாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...