வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடம் என்று பல மொழி சினிமாவில் நடித்து வரும் மன்சூரலிகான், தற்போது 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் அவர், பல படங்களை இயக்கி தயாரித்தும் இருக்கிறார். அந்த வரிசையில் ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மன்சூரலிகானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கடமான்பாறை’.
இதில் இளம் ஹீரோவாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இவருடன் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போல வாழும் மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக அனுராகவி நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக ஜெனி பெர்னாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டா மணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ், ஆதிசிவன், விசித்திரன், கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரவிவர்மா இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்கிறார். விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான் ஆகியோர் பாடல்கள் எழுத, ஜெயகுமார் கலையை நிர்மாணிக்கிறார். டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா ஆகியோர் நடனம் அமைக்க, ராக்கி ராஜேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறர். ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
படம் பற்றி கூறிய மன்சூரலிகான், “தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டடித்து விட்டு தாந்தோன்றித் தனமாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சனைகள், இன்றைய இளைய சமுதாயத்தின் மனோபாவம், இதை நகைச்சுவையாக பிரதிபலிப்பதுதான் இந்த ’கடமான்பாறை’.
படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன அந்த பாடல்கள் ஒவ்வென்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் சதாசிவ் கோனே நீர்வீழ்ச்சியிலும், பாப்பநாய்டு பேட்டை, மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...