சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஹீரோ மற்றும் வில்லன் என்று பல படங்களில் நடித்து வருபவர், நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே திருமணம் ஆனா ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்க முடிவு செய்திருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு அதை பொய்யாக்கும் விதத்தில் இந்த காதல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி, தனது குழந்தை முத்ரா சிம்ஹாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...