நடிகர் ரஹ்மான் நடித்து வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் அவர் ஹீரோவாக நடித்த ‘துருவங்கள் பதினாறு’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழ் மற்றும் மலையாளத்தில் வசூலில் சக்க போடு போட்டது.
இந்த நிலையில், பிரிதிவிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணம்’ படத்தில் ரஹ்மான தாமோதர் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘ரணம்’ பட டீசர் மக்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், ’தாமோதரின் லாவ் ஆஃப் சர்வைவல்’ என்ற தலைப்பில் வெளியான டீசர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் தோன்றி தனது கதாபாத்திரம் குறித்து கூறுவது போல டீசர் அமைக்கப்பட்டுள்ளது.
இஷா தல்வார் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை னிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார். பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...