Latest News :

‘Mr.சந்திரமெளலி’ குழுவின் உழைப்பை பாராட்டிய தயாரிப்பாளர்!
Tuesday March-20 2018

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘Mr.சந்திரமெளலி’ படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் சார்பில், கிரியேடிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

இப்படக்குழுவிவினர் படப்பிடிப்பு ஆரம்பத்ததில் இருந்து விறுவிறுப்பான பணியாற்று படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு, தற்போது எஞ்சியுள்ள இரண்டு பாடல்களை படமாக்குவதற்காக தாய்லாந்து சென்றுள்ளார்கள். அங்கேயும் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி வரும் அவர்களது வேலை திறணைக் கண்டு பலர் பிரமித்து போயுள்ளார்களாம்.

 

இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர். எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின்  போஸ் புரொடக்‌ஷன்ஸ் பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். 'Mr.சந்திரமௌலி' படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார்.

Related News

2210

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery