2000 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் சினேகா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருபதோடு, விஜய், அஜித், கமல், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
சுமார் 10 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்தவர், 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பிறகு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திவர் சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் பிஸியாகியுள்ளார்.
இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்த சினேகா, தற்போது அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக எந்நேரமும் ஜிம்மில் கிடக்கும் அவர், தினமும் ஜிம்மில் கடினமாக உழைக்கிறாராம். எதற்கு இந்த வேண்டாத வேலை, என்று அவரிடம் கேட்டால், தான் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும், அதற்காகவே தனது உடலை குறைப்பதாகவும் கூறியிருக்கிறார்.
உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்புகள் வரும் என்பதால் அவர் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். அதே சமயம், நல்ல வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக போராடும் தனது கணவருக்கு சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைப்பதற்காக விரைவில் படம் ஒன்றை தயாரிக்கவும் சினேக முடிவு செய்துள்ளாராம். அதற்கான பணத்தை சேர்க்க தான் அவர் தொடர்ந்து நடிக்கவும் மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...