’விஸ்வாசம்’ மூலம் இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித், இப்படத்தில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று சிவாவுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ கதை குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கதைப்படி அஜித் திருநெல்வேலியை சேர்ந்தவராம். திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வருபவர், வட தாதாவுடன் ஏற்பட்ட மோதலினால் அவரும் வட சென்னை தாதாவாகிடுகிறாராம். பிறகு அரசியலில் நுழைவது போல கதை நகருமாம். மேலும், படம் முழுவதும் அஜித் திருநெல்வேலி தமிழ் தான் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...