தனது கண்சிமிட்டல் மூலமாக ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்கள் கண் தன் மீது பட வைத்துள்ள பிரியா வாரியர், முன்னணி ஹீரோயின்களுக்கு சமமாக ரசிகர்களைக் கொண்ட நடிகையாக உருவெடுத்துள்ளார். அதுமட்டும் அல்ல எங்கு சென்றாலும் அவரைப் பெற்றி தான் பேச்சு அடிபடுகிறது.
முன்னணி பத்திரிகை, டிவி சேனல், இணையதளம் என்று ஊடகங்கள் பிரியா வாரியரை தேடி தேடி பேட்டி எடுத்து வருகிறார்கள். மேலும் பல சினிமா வாய்ப்புகளும் பிரியா வாரியரை தேடிச் செல்கின்றனவாம்.
இந்த நிலையில், கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரது படத்தில் பிரியா வாரியர் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஹீரோ சூர்யாவாம். ஆம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில் கண்சிமிட்டல் நடிகை பிரியா வாரியர் தான் ஹீரோயினாம்.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில், ’என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். இப்படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இப்படத்தை படமாக்க திட்டமிட்டுள்ள கே.வி.ஆனந்த், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா வாரியரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். தற்போது அதற்கான பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...