’மதுரை’ என்ற சீரியல் மூலம் நடிகரான செந்தில், ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகரானார். அத்துடன் சில டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய அவர், பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் ‘பப்பாளி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். அதன் பிறகு ‘வெண்ணிலா வீடு’, ’ரொம்ப நல்லவண்டா நீ’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், செந்திலுக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எப்படியாவது தானும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க ஹீரோவாகிவிட வேண்டும் என்று செந்தில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப்போக அவர் மீண்டும் தனது பழைய பணியான ரேடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல தொடங்கினார்.
இந்த நிலையில், தன்னை பிரபலமாக்கிய சீரியலில் மீண்டும் செந்தில் எண்ட்ரியாகியுள்ளார். ஆம், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் செந்தில் தான் ஹீரோ. அதுமட்டும் அல்ல இந்த சீரியலில் அவருக்கு இரட்டை வேடமாம்.
வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை திருதாய் செல்வம் இயக்கியுள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...