தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகர் ஆர்யா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 பெண்களில் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருவதோடு, அவ்வபோது சில நடிகர்களும், சில நடிகைகளும் பங்கேற்று ஆர்யாவிடம் கலந்துரையாடுகின்றனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எங்க வீட்டு பிள்ளை நிகழ்ச்சி பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும். எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆர்யா, சேனல் உயர் அதிகாரி, சங்கீதா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துரை செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...