மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் லேனா. எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி போகும் திறன் கொண்ட லேனா 10 வயது சிறுவன் முதல் பிரித்திவிராஜ் வரை என ஏகப்பட்ட ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். மேலும், தனுஷின் ’அனேகன்’ படத்தில் மருத்துவர் வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவர் பழனி முருகன் கோவிலில் திடீர் மொட்டையடித்துக் கொண்டுள்ளார். தான் மொட்டை அடித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் மொட்டையடித்ததற்கான காரணம் குறித்து விசாரித்த போது, சமீபத்தில் லேனா நடிப்பில் வெளியான ‘இறா’ என்கிற மலையாளப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தான் அவர் பழனி முருகன் கோவிலில் தனது முடியை காணிக்கையாக கொடுத்துள்ளாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...