‘பிரேமம்’ படத்தினால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ள மலையாள நடிகர் நிவின் பாலி, அவ்வபோது தமிழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இப்படத்தில் மோகன் லால் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் அமலா பால் ஒப்பந்தம் செய்யபப்ட்டார். பிறகு அவர் படத்தில் இருந்து விலகியதால் பிரியா ஆனந்த் அவருக்கு பதில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மலபாரில் நடந்த போது, சண்டைக்காட்சியில் பங்கேற்ற நிவின் பாலி, உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் நடித்தார். அப்போது அவர் கீழே விழுந்து, அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், இரண்டு வாரம் நிவின் பாலி ஓய்வில் இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ‘காயம்குளம் கொச்சுன்னி’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...