சைலண்டாக ஆரம்பித்த சினிமா வேலை நிறுத்த போராட்டம் தற்போது பல சினிமா தொழிலாளர்களின் கூக்குரலிடம் அளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. விஷால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாரதவிதமாக நடிகர் சிம்பு கலந்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிட்ட சிம்பு, கூட்டத்தில் கலந்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூட்டத்தில் அவர் என்ன பேசினார்? என்று அறிந்துக்கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டினார்கள். தற்போது கூட்டத்தில் சிம்பு பேசியது வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சிம்பு, தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். அவர்களின் சம்பளத்தை குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் கருப்பு பணத்தில் சினிமா எடுப்பதை நிறுத்துங்கள். அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து ஒழுங்காக வரிக்கட்டி கணக்கு காட்டுங்கள்.
ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்குகிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார், என்பது அந்த படத்தில் நடிக்கும் நடிகருக்கு தெரிய வேண்டும். சினிமாவில் கருப்பு பணத்தை ஒழியுங்கள், அனைத்துமே சரியாகிவிடும், என்று பேசியுள்ளார்.
சிம்புவின் இத்தகைய பேச்சை வரவேற்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...