உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அருண்ராஜா காமராஜ், நடிகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வந்தாலும், தனது லட்சியமான படம் இயக்குவதற்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்.
அவரது ஆர்வத்தை புரிந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அருண்ராஜ் காமராஜை இயக்குநராக்குவதற்காக, அவரே சொந்தமாக படம் தயாரிக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ், இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ள இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக நடிகைகளும், படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீராங்கணைகளும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். பயிற்சி முடிந்த பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபு நினன் இசையமைக்க, ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்கிறார். லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்க, பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்கிறார். போஸ்டர் டிசைன்கள் வடிவமைப்பை வின்சி ராஜ் கவனிக்கிறார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...