தமிழக அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன், ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ஒரு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதற்கு, அவரது ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒரு ஊழல் மற்றும் துர்பாக்கியமான விபத்து போதும் என்றால், ஏன் தமிழகத்தில் எந்த கட்சியும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. போதுமான குற்றங்கள் நடைபெற்று விட்டது.
என்னுடைய நோக்கம் ஒரு சிறந்த தமிழகமே. என்னுடைட கருத்தினை வலிமைப்படுத்த யாருக்கு தைரியம் உள்ளது?. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் என் குரலுக்கு உதவும் கருவிகள். இந்தக் கட்சிகள் சரியில்லை என்றால் வேறு கட்சியை தேடுவோம்.
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...