விஜய் சேதுபதியை வைத்து ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதை வைத்து ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதோடு, படத்தையும் விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.
இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் கதை பிரான்ஸ், போர்ச்சுக்கள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடக்கிறது. அதற்காக படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு பறந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது சினியா தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்திற்காக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதற்கு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் தடையை மீறி தனது ஜுங்கா படப்பிடிப்பை நடத்துவதற்காக போர்ச்சுக்கள் நாட்டிற்கு பறந்திருக்கிறார்.
இன்று (மார்ச் 23) வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி தடையை மீறி, தனது படக்குழுவினருடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு பறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமாக, விமான டிக்கெட் பதிவு, படப்பிடிப்புக்கு அனுமதி என்று விஜய் சேதுபதி கூறினாலும், உண்மையான காரணம் ஹீரோயின் சாயிஷா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாயிஷா ஜுங்கா படத்திற்காக கொடுத்திருக்கும் தேதியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதி தடையை மீறி படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...