பிருத்வி ராஜன், அறிமுக நாயகி வீணா ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் படம் ‘தொட்ரா’. சர்ச்சையான விஷயத்தை பற்றி பேசியிருக்கும் இப்படத்தில் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணகுமார் தயாரித்துள்ள இப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார். உத்தமராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.
பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியை பழனியில் 5 நாட்கள் படமாக்கி முடித்துள்ளனர். பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் 150 பேர் வரை இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இறுதிப் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணகுமார் கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார். இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடா விருந்தோடு, மகிழ்வாக படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்துடன், சாலை ஓரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் உணவு பொட்டலங்களை ‘தொட்ரா’ படக்குழுவினர் வழங்கி அவர்களையும் மகிழ்வித்துள்ளனர்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடிட்டிங், டப்பிங் என்று பின்னணி வேலைகள் முடிக்கப்பட்டு தயாராக உள்ள நிலையில், தற்போது எடுக்கப்பட்ட காட்சிகளை அவற்றுடன் இணைத்துவிட்டால் போதும் படம் ரிலிஸுக்கும் தயாராகிவிடும்.
படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துக்கொடுத்த இயக்குநர் மதுராஜை பாராட்டிய தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணகுமார் மற்றும் அவரது கணவர் எம்.எஸ்.குமார், தொடர்ந்து நல்ல படங்களை இயக்கும் இயக்குநராக மதுராஜ் வருவார். அவருக்கும், படத்தை விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள், என்று கூறினார்கள்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...