கார்த்திக்கும் அவரது மகன கெளதமும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளி’. திரு இயக்கும் இப்படத்தில் ரெஜினா கசண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜி.தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட இருந்தது. அப்பாடல்களை தாய்லாந்து நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது அவர்களுக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது. இருந்தாலும், ஒட்டு மொத்த படக்குழுவும் ஜெட் வேகத்தில் செயல்பட்டு, சங்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறாமல் இரண்டு பாடல்களை தாய்லாந்தில் மிக விரைந்து படமாக்கி முடித்துள்ளார்கள்.
இதனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் ரொம்பவே குஷியடைந்திருப்பதோடு, இயக்குநர் திரு, நடிகர்கள் கெளதம் கார்த்திக், ரெஜினா உள்ளிட்ட படக்குழு அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...