தமிழ் சினிமா மட்டும் அல்ல உலக சினிமா வரலாற்றில் நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களைக் காட்டிலும் விலங்குகள் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கூட ஹீரோக்களுக்கு இணையாக விலங்குகள் நடித்திருக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தமிழ் சின்மாவில் நாயை மையப்படுத்திய அட்வென்சர் படம் ஒன்று உருவாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு கன மழையால் பெரு வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டிருந்த போது வெளியான ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி தான் இந்த நாய் அட்வென்சர் படத்தை எழுதி இயக்குகிறார்.
ஒரு நாய்க்கும், மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும், ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் மையமாக வைத்து உருவாக உள்ள இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விதத்தில் அட்வென்சர் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...