சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் வையாபுரி, போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த போது பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி அவருக்கு கைகொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.
இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜூலி, ஓவியா, ரைசா, ஆரவ் போன்றவர்கள் பிரபலமடைந்தது போல வையாபுரி பிரபலமாகவில்லை, அதேபோல் அவர்களுக்கு கிடைப்பது போன்ற பட வாய்ப்புகளும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சமயத்தில் அதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் வையாபுரியுடன் தொடர்பில் இருந்தார்களாம். தற்போது ஆரவ், காயத்ரி ரகுராம், சினேகன் மற்றும் ஆர்த்தி ஆகிய நான்கு பேர் மட்டுமே வையாபுரியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம், மற்றவர்கள் அவர் போன் செய்தால் கூட போனை எடுப்பதில்லையாம். இதனால் வருத்தமடைந்துள்ள வையாபுரி, இந்த விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அவர்களும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...