தனது திருமணத்திற்காக பிரபல டிவி சேனலுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் நடிகர் ஆர்யா, 16 பெண்களுடன் பழகி வருகிறார். இவர்களுக்கு தினமும் ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுடன் தனியாக நேரல் செலவிடுகிறார். இந்த 16 பெண்களில் சிறந்தவர்கள் அதாவது வெற்றி பெறுபவர்களை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இந்த பெண்களில் ஒருவரை கூட ஆர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுமாம்.
இப்படி ஆர்யாவின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்துள்ள இந்த டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண்கள் ஆர்யாவை எப்படியாவது கவர்ந்து கரம் பிடிக்க வேண்டும், என்பதற்காக பல வித்தைகளை காட்டி வருகிறார்கள்.
இந்த பெண்களின் செயலையும், இந்த டிவி நிகழ்ச்சியையும் எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, நடிகர் ஆர்யா, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சேனல் உயர் அதிகாரி ஆகியோர் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ஆர்யாவின் நிகழ்ச்சி தடை விதிக்கப்படலாம், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஒரு மகன் இருக்கும் பெண் ஒருவர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய நிலையில், ஆபாச படங்களில் நடிக்கும் நடிகை ஒருவரும் இந்த போட்டியில் கலந்துக்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்வதற்காக பெண் ஒருவர் தனது கருவை கலைத்துவிட்டு இப்போட்டியில் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் ஏன் கருவை கலைத்தார் போன்ற விஷயங்களை ஆர்யாவிடம் சொல்லி அழுதும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...