டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை கடுப்படுத்துதன், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துதன் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு சினிமா தொழிலாளர்கல், நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தாலும், சில நடிகர்களும், சில தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விஷால் ரஜினிகாந்தை சந்தித்து வேலை நிறுத்தம் பற்றி எடுத்துகூறிய போது கூட, ரஜினிகாந்த் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதேபோல், கமல்ஹாசனும் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள், என்று கூறியிருக்கிறாராம்.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி, சினிமா வேலை நிறுத்தம் குறித்து விஷாலை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர்கல் நலனுக்காக போராட்டம் நடத்துவது வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால் அதை நீங்கள் வேலை நிறுத்தம் செய்யாமலேயே, அனைத்து பிரச்சினையையும் சரி செய்திருக்கலாமே. இதற்காக தான் உங்களை பதவியில் உட்கார வைத்தார்களா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே, வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய நடிகர் அரவிந்த்சுவாமி, டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க தனது யோசனையையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...