சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவி வைரலாக பேசப்பட்டு வருகிறார். சேரனின் பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன நடிகை பிந்து மாதவி வெப்பம், கழுகு மற்றும் தேசிங்குராஜா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தபடாத வாலிபர் சங்கம் ஆகிய இரு படங்களும் சூப்பர்ஹிட் வரிசையில் சேர்ந்தது. இவர் கடைசியாக தமிழில் பசங்க 2 மற்றும் ஜாக்சன் துரை ஆகிய படங்களில் தோன்றினார். கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிந்து, தற்போது பக்கா மற்றும் புகழேந்தி ஆகிய நான் என்ற இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிந்து மாதவி தினமும் தனது செல்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விக்ரமாதித்யன் கதைகளில் வரும் வேதாளம் போல முருங்கை மரத்தின் மேல் ஏறி நின்று போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் நெட்டிசன்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...