சினிமாவின் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு அவர்களது முதல் படம் முதல் படமாகவே இருந்ததில்லை. எதாவது சில காரணங்களினால் முதல் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டாலும், அந்த படத்தின் ராசியால் அவர்கள் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வந்துவிடுவதுண்டு.
அந்த வரிசையில் தற்போது ஓவியா என்று சொல்லப்படும் ‘ஓவியாவ விட்டா யாரு’ படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான பாரதி, தற்போது பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி ஓஹோ...என்று வளர்ந்து வருகிறார்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்ஸ்ராக பணியாற்றி வந்த பாரதி, சுமார் 1000 படங்களுக்கு நடனமாடி இருக்கிறார். பிருந்தா, கல்யாண், ராபர் போன்ற மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றிய பாரதி, பிக் பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓவியாவ விட்டா யாரு’ படத்தின் மூலம் தான் நடன இயக்குநராக அறிமுகமானார். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அப்படத்திற்கு பிறகு பாரதி நடன இயக்குநராக பணியாற்றிய ‘வீரதேவன்’, ‘தாராவி’ போன்ற படங்கள் வெளியாகிவிட்டது.
தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘நேத்ரா’, பா.விஜய் இயக்கி நடிக்கும் ‘ஆருத்ரா’, தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் ‘உலகம் விலைக்கு வருது’ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதி பாண்டிய, ஆர்.கண்ணன், பன்னீர் செல்வம் போன்ற பிரபல இயக்குநர்கள் படங்கள் என்று ஏராளமான படங்களில் பணியாற்றி வரும் பிஸியான டான்ஸ் மாஸ்டராகியுள்ள பாரதி, தெலுங்கில் கிரண், பரத் போன்ற இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டிலும் சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் பாரதி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேத்ரா’ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியடோடு, அப்படத்தில் இடம்பெறும் “வந்துடாயா வந்துடாயா...குத்து பாட்டு பாட வந்துடாயா...” என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து செம குத்தாட்டத்தையும் போட்டிருக்கிறார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...