Latest News :

மியூசிக்கல் திரில்லர் படமாக உருவாகும் ‘அமுதா’!
Tuesday March-27 2018

சதர் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சஃபிக் தயாரித்திருக்கும் படம் ‘அமுதா’. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட மியூசிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.

 

ஸ்ரேயா ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அனீஷ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர், அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் பனங்கட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.

 

‘அமுதா’ படத்திற்கான கதையை 2016 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்த இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன், கதை எழுத தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி  இருக்கிறார். பிறகு தான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதியிருக்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் அமுதா என்கிற பெயரை தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே அன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.” என்றவரிடம், இது பேய் படமா? என்று கேட்டதற்கு, “நிச்சயமாக இது பேய்ப் படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப் படத்தில் எந்த அளவுக்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.” என்றார்.

 

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப் பணியில் உள்ள ‘அமுதா’ இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது.

Related News

2278

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

Recent Gallery