ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய படத்தில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார்.
மூத்த இயக்குநர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ரஜினிகாந்த், காலத்திற்கு ஏற்ப வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இளம் இயக்குநர்களின் படங்களில் நடிகக் தொடங்கியுள்ளார். பா.ரஞ்சித்துடன் ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என்று தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தவர், தற்போது ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் கதைக்களம் அரசியல் பின்னணியைக் கொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து படம் குறித்து விவாதித்த கார்த்திக் சுப்புராஜுக்கு, ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முழுக்கதையையும் கேட்டிருக்கும் ரஜினிகாந்த், படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம், என்றும் கூறியிருக்கிறாராம்.
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு ஜோடி தேடும் பணியில் கார்த்திக் சுப்புராஜ் ஈடுபட்டுள்ளாராம். கதைக்கு ஏற்றபடி எந்த நடிகையானாலும் ஓகே தான், என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதால் தீபிகா படுகோனை ரஜினிக்கு ஜோடியாக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், அஞ்சலி மற்றும் திரிஷா ஆகியோரும் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...