ஒரு சில படங்களில் நடித்தே ஏராளமான ரசிகர்களின் கனவு தேவதையானவர் நடிகை நஸ்ரியா நஸீம். தொடர் பட வாய்ப்புகள், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி என்று சினிமாவில் வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் போதே, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டினால நஸ்ரியா, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் நஸ்ரியா தற்போது ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் அவரை அப்படியே தமிழுக்கும் அழைத்து வர பலர் முயற்சித்து வருகிறார்களாம். இருந்தாலும், மலையாள சினிமாவுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கும் நஸ்ரியா தமிழில் நடிப்பாரா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.
அதே சமயம், தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கவும் செய்கிறாராம் இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...