கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியான ‘அழகென்ர சொல்லுக்கு அமுதா’ திரைப்படம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வெளியாகிறது.
ரபேல் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரபேல் சல்தானா தயாரித்த இப்படம் கிரிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் வெளியாகி ரசிகர்களிடமும், பத்திரிகையினரிடமும் பாராட்டு பெற்றது. தரமான கமர்ஷியல் மற்றும் சிறந்த காமெடிப் படம் என்று அனைவரும் படத்தை பாராட்டியதால், படக்குழுவினர் உற்சாகமடைந்தனர்.
இதற்கிடையே டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவ தொடங்கியதில் இருந்து திரையரங்குகளில் படங்களை திரையிடுவதை நிறுத்திவிட்டனர். பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் தியேட்டர்கள் பக்கம் பொதுமக்கள் செல்லவில்லை.
அதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீசாக ஆரம்பித்த நிலையில், நல்ல படம் என்று பெயர் எடுத்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ வெறும் மூன்ரு நாட்கள் ஓட்டத்துடன் தியேட்டர்கலை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ ஆம் தேதி இந்தப் படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.
திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப் படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.
“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.
எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்பு முனையாக இருக்கும் என நான், இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம். தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.
ஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் இந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்து வந்தோம்.
இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.
அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்த சமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ ஆம் தேதி இந்தப் படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.
வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.
ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...