இந்திய சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் புகார்கள் வந்துக்கொண்டு இருக்க, தற்போது தென் கொரிய சினிமாவிலும் இதுபோன்ற பிரச்சினைகள் எழ தொடங்கியுள்ளது.
தென் கொரிய நடிககை ஒருவர் பிரபல இயக்குநரும், நடிகரும் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கிம் என்ற அந்த பிரபல இயக்குநர் மீது ஏற்கனவே மூன்று பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அதில் ஒரு நடிகை, பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது, தினமும் இரவு நேரத்தில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குள் இயக்குநர் கிம் நுழை முயன்றார். போன் செய்தார். ஆனால், நான் கண்டுக்கொள்ளவில்லை. கதை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி, என்னை அவர் தனது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்ற போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அவருடன் நடிகர் சோ ஜே ஹ்யூனும் என்னை கற்பழித்தார், என்று கூறியுள்ளார்.
மேலும், ஆடிசனின் போது கிம் தனது மார்பங்களை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியதாகவும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியதாகவும் மற்றொரு நடிகை தெரிவித்துள்ளார். அதேபோல், ஸ்கிரிப்பிட்டில் இல்லாத செக்ஸ் காட்சிகளை படமாக்கிய கிம், தனது ஆசைக்கு ஒத்துழைக்காத நடிகைகளை காட்சி என்ற பெயரில் அடித்து துன்புறுத்த செய்வார், என்று மற்றொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...