பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் விவசாயி வேடத்தில் நடித்து வரும் கார்த்தி, தற்போது விவசாயம் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் விவசாயத்தின் மீது ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
அதன்படி, செங்கல்பட்டு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் வேணுகோபல் என்பவரின் பண்ணைக்கு குடும்பத்தோடு விசிட் அடித்த கார்த்தி, அவரிடம் இயற்கை விவசாய முறைகளை கேட்டு கற்றுக்கொண்டாராம்.
இது குறித்து கூறிய கார்த்தி, “இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்களை கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரான வேணுகோபால் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும், நம்பிக்கையுடனும் தனது விலைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். அவர் கார்த்தியின் வருகை குறித்து கூறுகையில், “நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர், நடிகர் கார்த்தியின் குடும்பம் உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர், என்று கூறினார்.
மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்துக் கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது. அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாராட்ட வேண்டிய விஷயம்.
பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால். ஆபத்து நமக்குத்தான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சி செய்வோம்.” என்றார்.
செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் www.ilearnfarming.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...